எமக்கான உணவுத் தேவையை சுயமாக நிவர்த்தி செய்ய வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Friday, November 4th, 2022
உணவுப் பாதுகாப்பு என்பது சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற நிலையில், எமக்கான உணவுத் தேவையை சுயமாகவே நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுத் திருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்தின், ‘கிராமத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு’ எனும் தொனிப் பொருளிலான உணவுத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்த நிலையில் கட்டைக்காடு கலை ஔி கலாமன்ற மாணவிகளின் கலாசார நடனத்துடன் அமைச்சர் வரவெற்றக்பட்டிருந்த நிலையில் உணவுத் திருவிழா நிகழ்வு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


