எதிர்வரும் ஜுன் 29 இல் முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 20th, 2020

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அமைச்சு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கும் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவு பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில்  கடலட்டை பிடிப்பு  மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் தடை செய்யப்படுவதை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்மானம் மிக்க கலந்துரையாடலை நடத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு - இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்...
வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வது தொடர்பில் அமைச்சர...