ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை – சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Monday, June 17th, 2024
…….
சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரத்தை பெற்துத்தருமாறு ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த பரமன் என்பவரது கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறைவுசெய்து கொடுத்துள்ளார்.
குடும்ப வருமானத்துக்கான பொருளாதாரத்தை ஈடுசெய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய கரம்பனை சேர்ந்த பரமன் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மரம் வெட்டும் இயந்திரம் ஒன்று கொள்வனவுசெய்து இன்றையதினம்
அமைச்சரால் வழங்கப்பட்டது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சி நிதியிலிருந்தே குறித்த மரங்கள் வெட்டும் இயந்திர கருவி ஒன்று அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
பரமன் என்பவர் முன்னாள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்!
பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தென் பகுதிக்கு நேரடி விஜயம் - குறைபாடுகளை தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு ...
|
|
|


