உழைத்து வாழ வழிவகை செய்து தாருங்கள்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்  முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்கள் உருக்கமான வேண்டுகோள்.

Friday, November 9th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு அபிவிருத்தி , மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கடற்றொழிலில் தாம் எதிர்கொண்டுவரும் தடைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தந்து தாம் உழைத்து வாழ வழிவகை செயது தருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது முல்லைத்தீவு அரச விருந்தினர் விடுதியில் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தாம் எதிர்கொண்டுவரும் ஏனைய பிரச்சினைகளான காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் , வீடமைப்பு வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் எதிர்கொண்டு வருவதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏககாலத்தில் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாம் பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

45665134_1125694424256883_2788706240769818624_n

45645091_782775435398724_4854819366820118528_n

45626313_353557038539088_4481832234898161664_n

45667834_174995070108107_3479224715816468480_n

Related posts:

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கே ஆதரவு – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர...
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி ...