உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் – திருமலையில் செயலாளர் நாயகம் உறுதியளிப்பு.

Tuesday, November 5th, 2019

எம்மை நம்பி வாகளியுங்கள் உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்கள் உள்ளடங்காலாக எமது மக்களின் அபிலாசைகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருமலையில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எதிர்வரும் தேர்தலில் நீங்கள் யாரையும் நம்புகின்றீர்களோ இல்லையோ என்னை நம்புங்கள் நான் செய்வேன் செய்விப்பேன் என்பதே எனது நம்பிகை உறுதிமொழி.

கடந்த காலதில் நான் மக்களுக்காற்றிய மாபெரும் மக்கள பணிகள் உங்கள் கண்முன்னே தெரிகின்றது.

அந்தவகையில் மீண்டும் அந்த ஆட்சி மலரும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை வைத்து கடந்த கால செயற்பாட்டு அனுபவங்களையும் அவர்களுடனான பரீட்சயத்தையும் கொண்டு இழந்தவை அனைத்தையும் நான் மீட்டுத்தருவேன்.

குறிப்பாக உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்கள் வரை பெற்றுத்தருவேன் . அதற்காக நீங்கள் நாம் ஆதரிக்க கோரும் மொட்டு சின்னத்க்திற்கு வாகளித்து கோட்டபய ராஜபக்ச அவர்களை வெற்றியடைய செய்து அந்த வெற்றியில் பங்காளர்களாகுங்கள் என்றார்.

Related posts:

நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்க...
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
கடலட்டைப் பண்ணைகள் சிறுதொழிலாளர்களுக்கு இடையூறாக அமையாது - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!