ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020

நடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி என்பது தமிழ் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கான சர்வலோக நிவாரணியாக அமையும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா கற்குளம் 1 பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பது மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே உருவாக்கப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டமும் வழிமுறையும் ஈ.பி.டி.பி. கட்சியிடம் இருக்கின்றது. எனினும்  அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான மக்கள் பலத்தினையே எதிர்பார்க்கின்றோம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எமது கரங்கள் பலப்படுத்தப்படுமாக இருந்தால் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தொடர்ந்து வருகின்ற சில வருடங்களில் நிறைவேற்ற முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் ஈ.பி.டி.பி. கட்சிக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் அனைத்து பிரச்சினைகளுக்குமான சர்வலோக நிவாரணியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று அகவை 76 – ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தே...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் - கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அம...

நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ...