இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா – அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021

இந்து சமய அறநெறியை மட்டுமல்லாது எமது இளம் சமூகத்தை ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடன் ஆளுமை மிகுந்த பண்புகளை கொண்ட சமூகமாக உருவாக்க அர்பணிப்புடனும் நெஞ்சுர உறுதியோடும் உழைத்தவர் சபாரட்ண ஜயர்  ஈஸ்வரசர்மா என சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வயது மூப்பின் காரணமாக தனது 91 வயதில் உயிர் மூச்சை நிறுத்திக்கொண்ட சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மாவின் மறைவு தன்னை மட்டுமல்லாது பலரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் காலமான அமரர் சபாரட்ண ஜயர்  ஈஸ்வரசர்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்றையதினம் (15) அன்னாரின் நாயன்மார் கட்டிலுள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மாவின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தார்.

அத்துடன் அன்னாரது இழப்பில் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்மன ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்த அமைச்சர டக்ளஸ் தேவானந்தா அன்னாரது இறுதி கிரியை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா தமிழ் ஆங்கிலம் சிங்களம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில்  நன்கு பாண்டித்தியம் பெற்றிரந்ததுடன் பல மாணவர்களை இத்துறையில் உருவாக்கிய பெருமைக்குரியவராக இருந்தது மட்டுமல்லாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தையார் கே.சி.நித்தியானந்தாவின் ஆசானாகவும் விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக உள்ள சூழ நிலையில் இடம்பெற்ற அன்னாரின் இறுதி நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் அன்னாருக்கு தமது அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வ...
வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு - கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!