மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2018

எங்காவது ஓரிடத்தில் தீ பற்றி எரிந்தால் அதை நாங்கள் தண்ணீரி ஊற்றி அணைக்கப்பார்க்கின்றோம் . ஆனால் மாற்றுத்தரப்பினர் எண்ணெய் ஊற்றி அதை மேலும் எரிக்கப்பார்க்கிறார்கள். அதுபோல் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதனூடாக அவர்களது வாழ்வு ஒளிபெறுவததைப் பார்த்தே நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினருடனான சந்திப்பில் கரத்த தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

சுயநால அரசியல்வாதிகள் எரியும் பிரச்சினையை தீரா பிரச்சிரயனையாக காண்பதில் மட்டமே மகிழ்சி காண்கிறார்கள். ஆனால் நாம் அவ்வாறானவர்கள் அல்லர். இதுவே எமக்கும் ஏனைய தரப்பினருக்கும் வித்தியாசமாகும்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே எனக் கூறிக் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் இது வரையில் எவ்விதமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் முன்னெடுக்க முடியாதுள்ளமைக்கு அவர்களது ஆற்றலற்ற அக்கறையற்ற தன்மையே பிரதான காரணங்களாகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்துக் கொண்டு அதனூடாக தமது சுயலாப அரசியலையும் சுகபோகத்தையும் அனுபவிக்கவே விரும்புகின்றனர்.

ஆனால் நாம் மக்களின் தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளைக் காண வேண்டும் என்பதிலேயே எப்போதும் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம். இந்நிலையில்  யார் பிரச்சினைக்கு தீர்வுகாண முயல்கின்றார்கள் என்பதை கடந்தகால அனுபவங்களிலிருந்து மக்கள் அறிந்துகொண்டுவிட்டார்க்ள்.

அந்த வகையில் தான் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றி பெற வைப்பார்களேயானால் நிச்சயம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காணமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: