கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Friday, July 24th, 2020
கிளிநொச்சி, கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கு விஜயம் செய்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த காப்பகத்தின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
சுமார் 400 இற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளர் குடும்பங்களை உறுப்பினர்களாக கொண்ட குறித்த காப்பகத்தினால் கூட்டுப் பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட...
சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!
யாழ் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் உருவாகவுள்ள பொது மலசலகூட தொகுதி - அமைச்சர் டக்ளஸ் துரித நடவடி...
|
|
|
பூர்வீக காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக...
அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு ச...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - அடையாள அட்டை இன்மையால் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாதவர்களுக்கு தீர்வு!


