இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் – அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர் உறுதி !

Thursday, May 6th, 2021


………….
தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கடற்றொழிலாளர் சார்பான விவகாரங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், புதிய மீன்பிடித்துறை அமைச்சருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அனிதா ஆர். இராதாகிருஸ்ணன், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்தும் அக்கறை செலுத்தி வருவதாகவும் எதிர்காலத்திலும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் தி.மு.க. அக்கறை செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்...
பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்...