இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக துஷார லொக்குகுமார நியமனம்!
Tuesday, June 4th, 2024
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024 ஆம் திகதிமுதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அவர் பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் அந் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டி.வி. உப்புல் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்ததை தொடர்ந்து இப் பதவியில் நியமிக்கப்பட்டள்ளார்.
இவர் கொழும்பு பல்கைலை கழகப் பட்டதாரியாவார். நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்னவும் கலந்து கொண்டார்.
இதனிடையே
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து நிறுவனத்தின் செயற்பாடுகள், முன்னேற்ற நடவடிக்கைகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|
|


