இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் குருநகர் சுருக்குவலை தொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, October 19th, 2018

திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இறால் பிடிப்பு தொழிலை மேம்படுத்துவதற்கான்  தேவைப்பாடுகளையும் அனுமதியையும் பெற்றுத்தருமாறு குருநகர் சுருக்குவலை கடற்றொழிலாளர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்த குறித்த குருநகர் கடற்றொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர். இதன்போதே குறித்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கடற்கரையோரங்களில் பல்வேறுபட்ட கழிவுப்பொருட்கள் கலக்கவிடப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிக்கப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. அத்துடன் இறால் போன்ற கடலுணவுகளை பிடிக்கும் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டும் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது இறால் பிடிக்கும் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் சந்தைவாய்ப்பு கிடைக்காத நிலையில் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இத்தகைய நிலையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகளை ஆராய்ந்து தமக்கு குறித்த தொழிலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த தொழிலாளர்களின் தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வு பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20181019_114305

IMG_20181019_114336

Related posts: