ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, December 4th, 2016

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதிக்கும், யாழ் மாவட்டத்தில் மருதங்கேணிப் பகுதிக்கும், இரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். அதேபோல் மேலும்யாழ் மாவட்டத்தில் தற்போது செயற்பட்டு வருகின்ற இரு பிரதேச சபைகளின் நிர்வாகக் கட்டமைப்பினை விரிவாக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு கேளிவி எழுப்பியுள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வலிகாமம் கிழக்கு – கோப்பாய் பிரதேச சபையானது 31 கிராம சேவையாளர்கள்; பிரிவுகளைக் கொண்டதும்;, 102 சதுர கிலோ மீற்றர் பரந்த நிலப் பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதேபோல் சாவகச்சேரி பிரதேச சபையானது 49 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைக் கொண்டதும், 195.78 சதுர கிலோ மீற்றர் பரந்த நிலப் பரப்பைக் கொண்டதுமாகக் காணப்படுகிறது.

எனவே, இந்த இரு பிரதேச சபைகளினதும் நிர்வாகத்தை இலகுபடுத்தும் முகமாகவும், மக்களின் வசதி கருதியும், வலிகாமம் கிழக்கு – கோப்பாய் பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து அச்சுவேலி பிரதேச சபையை மேலதிகமாகவும், சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து, கொடிகாமம் பிரதேச சபையை மேலதிகமாகவும், உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அதே போன்று வடக்கு மாகாணத்தில் தற்போது மேலும் ஒரு முக்கிய தேவை எழுந்துள்ளது. அதாவது தற்போது அதி வளர்ச்சி கண்டுவரும் கிளிநொச்சி நகருக்கென ஒரு நகர சபை அமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஒரு பாரிய நகரமாகத் தற்போது முன்னேற்றம் கண்டுவரும் கிளிநொச்சி நகரத்தின் நிர்வாகம் இன்னும் கரைச்சி பிரதேச சபையின் கீழேயே இருந்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ள நிலையில், அங்குள்ள மூன்று பிரதேச சபைகளில் இரண்டு பிரதேச செயலகங்களைக் உள்ளடக்கியதாகவும், 58 கிராம சேவையாளர்களைக் கொண்டதாகவும், மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1,237.11 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 410.96 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாகவும், அதிக சனத்தொகையினைக் கொண்டதாகவும் கரைச்சி பிரதேச சபை காணப்படுகின்றது.

அதே நேரத்தில், பரந்த பிரதேசமான கண்டாவளைப் பிரதேச மக்களின் தேவைகளை இலகுபடுத்தவும் சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை சரிவரப் பேணவும்  கரச்சிப் பிரதேச சபையின் கீழ் காணப்படும் கண்டாவளைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியைத் தனியான ஒரு கண்டாவளைப் பிரதேச சபையாக உருவாக்குவதற்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்தை அவதானத்தில் கொண்டும், குறிப்பாக எமது மக்களின் நலன் கருதிய சேவைகளை மனதில் கொண்டும், அம் மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுவரும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்கு மேலதிகமாக, கிளிநொச்சி நகரை மையப்படுத்தியதாக ஒரு நகரசபையை உருவாக்குவதற்கும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

01

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி!
பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...