வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் – டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.

Tuesday, October 31st, 2017

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது அத்தியாயத்தின் திருத்தமானது, தவறானதாக அமைந்திருந்த நிலையில் அதில் மாற்றம் கொண்டுவருமாறு டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த வேண்டுகோளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் டக்ளஸ் தேவானந்தா விஷேட கலந்துரையாடலின்போதே இவ்விணக்கம் காணப்பட்டுள்ளது

மேற்படி கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அத்தியாயாத்தின் (ஆ) பிரிவில், ‘கித்துள் மரத்தைத் தவிர, கள்ளை உற்பத்தி செய்யும் மரங்கள் எவற்றிலும்  “கள்” இறக்கப்படுதலாகாது’ என்றும், (ஈ) பிரிவில், ‘கித்துள் மரத்தைத் தவிர, வேறு ஏதேனும்  மரத்திலிருந்து “கள்” எடுக்கப்படுதல் அல்லது கீழிறக்கப்படுதல் ஆகாது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே அத்தியாயத்தின் சிங்கள மொழி மூலமான (ஆ) பிரிவில் ‘கித்துள் மரம் தவிர்ந்த “கள்” உற்பத்தி
செய்யப்படும் மரங்களிலிருந்தும் சீவல் தொழில் செயற்பாடுகள் செய்யக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பதாக இதே அத்தியாயத்தில் இதே பிரிவுகளில் ‘கித்துள், பனை, தென்னை தவிர்ந்த  ஏனைய மரங்களிலிருந்து கள்ளிறக்கப்படுதலாகாது’ என்றே குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது  இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  வடக்கு கிழக்கில் வாழும் மக்களில் கணிசமானோரின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக “கள்” இறக்கும் தொழில் விளங்கிவரும் நிலையில்
மேற்படி விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடி, மேற்படி
தொழிற்துறையை தடையின்றி முன்னெடுப்பதற்கும்

குறித்த தொழில் துறை சார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது தெரிழல் துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் குரல்கொடுக்காதிருந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிக்கு குறித்த தொழில்துறையை நம்பிவாழும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
தவறுகள் திருத்தப்பட்டு புதிய அத்தியாயம் எழுதப்படவேண்டும் - திருமலையில் டக்ளஸ் தேவானந்தா !
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...