இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 19th, 2019

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளினதும், மக்களினதும் தேவைக்கு அதிகமான 60 சதவீத நீர் கடலுக்கு திறந்துவிடப்படுகின்றது. கடலுக்குத் திறந்துவிடப்படும் நீரை யாழ்ப்பாண மக்களின் குடிநீர்த் தேவைக்கு கொண்வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வட மாகாண ஆளுனர் அவர்களின் முயற்சியை பாராட்டுகின்றேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது-

இரணைமடு குளத்திலிருந்து அங்குள்ள மக்களின் விவசாயத் தேவைக்கு மேலதிகமான நீரை கடலுக்குத் திறந்துவிடும் நீரை யாழ்ப்பாண மக்களின் குடிநீர்த் தேவைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நிதி ஒதுக்கப்படடடிருந்தாலும், அந்தத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியது.

இரணைமடு குளத்தின் குளக்கட்டு உயரத்தை மேலும் உயர்த்துவதும், அங்கிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போன்ற குடி நீர்வசதி இல்லாத கிராமங்களுக்கு குடிநீரை வழங்குவதும், கிளிநொச்சி விவசாயிகளின் தேவைக்கு அளவான நீரை அவர்களுக்கு வழங்pகுவதும், மிகுதியாக உள்ள நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்குவதும், அதனோடு இணைந்து யாழ்ப்பாணத்திற்கான வடிகாலமைப்பு செயற்திட்டத்தை செய்து முடிப்பதும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இருந்தது.

நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் வடமாகாணத்தின் மிகப் பெரிய நீர் முகாமைத்துவத் திட்டமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அரசியல் காழ்புனர்ச்சி காரணமாக கிளிநொச்சி மக்களிடையே பிரதேச வேறுபாடுகளை தூண்டிவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இத் திட்டத்தை தடுத்ததுடன், அந்த நிதியையும் திரும்பிச் செல்வதற்கு வழிவகை செய்ததுடன் அதை அழிவுக்கான அடையாளமாகவே வைத்திருக்க முயன்றார்கள்.

பின்னர் அந்த பாரிய திட்டமானது மாகாணசபையை பொறுப்பேற்ற செயற்திறனற்றவர்களால் பல கட்டங்களாக உடைக்கப்பட்டு, முதலில் இரணைமடு குளத்தை புனரமைப்பது என்றும், பின்னர் குடி நீருக்காக தண்ணீரை எவ்விதம் முகாமைத்துவம் செய்வது என்பதை ஆராயலாம் என்றும் தீர்மானித்ததன் அடிப்படையிலேயே இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டது.

குளத்தின் புனரமைப்பு மற்றும், நீர் வழிந்தோடும் கீழ் வாய்க்கால்கள் அமைப்பு போன்ற பல பணிகளில் பாரிய மோசடிகளும், கண்காணிப்பின்மையும் நடைபெற்றுள்ளன. அந்த மோசடிகள் காரணமாகவும், சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கு காரணமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அதிகாரத் துஷ;பிரயோகமான தலையீடுகள் அழுத்தங்களாக பிரயோகிக்கப்பட்டதன் காரணமாகவுமே அன்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டதுமாகும்.

அது தொடர்பான உரிய விசாரணைகள் தேவை என்பதை நாமே முதலில் சுட்டிக்காட்டியதுடன், விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலையும் வழங்கியிருந்தோம். இரணைமடு குளத்தில் மேலும் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்புப் பணிகளும், மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகளும் உரிய மேற்பார்வையிலும், மோசடிகளுக்கு இடம் கொடுக்காத வகையிலும் ஆக்கத்திற்கான பணிகளாக முன்னெடுக்கப்படவேண்டும்.

இந்த நிலையில் வடக்கின் ஆளுனராக பதவியேற்றுள்ள நீங்கள், இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு தொடர்பாக நடைபெற்றுள்ள மோசடிகளை விசாரிக்க குழு அமைத்திருப்பதுடன், குளத்திலிருந்து மேலதிகமாக கடலுக்கு திறந்துவிடப்படும் நீரை யாழ்ப்பாண மக்களின் குடிநீர்த் தேவைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருப்பதை வரவேற்கின்றோம்.

Related posts:

குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...
பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ...

தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு - பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!