இன்றைய உங்கள் எழுச்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் – பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!
Tuesday, November 12th, 2019
முல்லைத்தீவில் வாழும் மக்கள் இன்றையதினம் எமது பாதை நோக்கு அணிதிரண்டு வந்துள்ள தானது உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் என்றுமில்லாதவாறு பேரெழுச்சியுடன் அணிதிரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எந்த அரசும் எமது மக்களை அடக்கவோ மிதிக்கவோ முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதும் இல்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ச
ஆட்சிக் காலத்தில் உங்கள் உறவுகள் பலரை குறிப்பாக நாம் பல்வேறு போரளிகளை விடுவித்துள்ளோம். அதுபோல் உங்கள் வாழிடங்களில் உங்களை மீளவும் வாழ வழிவகை செய்திருந்தோம்.
ஆட்சி அதிகாரத்தில் நாம் குறைந்தளவான அதிகாரத்தை கொண்டிருந்த போதும் எமது மக்களின் பல்ல்வேறு தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுகண்டு கொடுத்துள்ளேன்.
அதேபோல நாம் மீண்டும் ஆட்சி அதிகாரங்களுக்கு வருவோமானால் தடைப்பட்டு போன அனைத்து பணிகளையும் மீண்டும் முன்னெலுத்துச் செல்வோ. நாம் சொல்வதை செய்பவர்கள் செய்வதையே சொல்பவர்கள்.
அந்தவகையில்தான் நாம் கூறுவந்திருக்கின்றோம் எம்மை பலப்படுத்துங்கள் நாம் உங்கள் எதிர்காலத்தையும் அபிலாசைகளையும் வென்றெடுத்து தருவேன் என்று.
இம்முறை நாம் உங்களிடம் வந்துள்ளது ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக. அந்த வகையில் ஜனாதிபது வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றிக்கு உங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என நாம் கோரிவந்திருந்தோம்.
எமது கோரிக்கையை இந்த மாவட்ட மக்கள் ஏற்று எம்முடன் மிகுந்த நம்பிக்கையுடன் அணிதிரண்டுள்ளீர்கள்.
உங்கள் எதிபார்ப்பை நாம் நிச்சயம் நிறைவுசெய்து தருவேன் நம்புங்கள் செய்வோம் செய்விப்போம் என்றார்.
Related posts:
|
|
|


