ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – ஆனாலும் இது இறுதி முடிவல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024

புதிய கடற்றொழில் சட்டமானது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டாலும் அந்த சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்தது வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது இறுதி முடிவானதல்ல. குறித்த சட்டவரைபு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே சட்டமாக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய சட்டவரைபு தொடர்பில் ஆராயும் முகமாக யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களம், யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களம், யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று பிற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில் –

தற்போது கடற்றொழில் அமைச்சும் கடற்றொழில் திணைக்களமும் ஒரு புதிய சட்ட வரைபை முன்வைத்துள்ளன.

அந்த சட்டவரைபு தயாரிக்கப்பட்டு முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரமுன்னரே அது தொடர்பில் பல வியாக்கியானங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

ஆனாலும் அவ்வாறு வெளியான பெரும்பான்மையாகன கருத்துக்கள் உண்மையானவை அல்ல என்பது இன்று புலனாகுகின்றது.

இவ்வாறான குழப்பங்களுக்கு காரணம் ஒன்று அறியாமையாக இருக்கலாம், அல்லது தெரிந்துகொண்டு வளமையான குழறுபாடுகள் குழப்பங்களை உண்டுபண்ணவும் இவ்வாறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் உண்மை நிலை இன்று வெளியாகியுள்ளது.

முன்பதாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டவரைபானது தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்தது வெளியிடப்பட்டுள்ளது.

ஆனாலும் இது இறுதி முடிவானதல்ல. குறித்த சட்டவரைபு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களும் உள்வாங்கப்படும்.

அதன்பின்னர் தான் அது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் கோரப்படும் இதன்பின்னர் அது சட்ட வல்லுநர்களிடம் கையளிக்கப்படும். சட்டவல்லுநர்கள் அதை சட்டரீதியாக வடிவமைத்தபின்  அது சட்டரீதியாக நாடாளுமன்றில் பாரப்படுத்தப்படும்.

இதேவேளை குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில்  பாரப்படுத்தப்பட்டாலும்,  பாரப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இரு வாரங்கள் அவகாசம் உள்ளது நீதிமன்றமூடாக இந்த புதிய சட்டமூலம் தொடர்பில் தமது அவிப்பிராயங்களை தெரிவிப்பதற்கு.

அந்தவகையில் ஒரு புதிய சட்டம் வருவதாக இருந்தால் இதுவே அணுகு முறை  அல்லது நடைமுறையுமாக இருந்து வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பாராட்டு – பிரதேச சபை தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுக...
முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைம...
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்க...

அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே...
எரிபொருள் தட்டுப்பாடு - பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை - அமைச்சர் டக்ளஸ் அற...