அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பாராட்டு – பிரதேச சபை தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுகிறது ஈ.பி.டி.பி!

Wednesday, February 3rd, 2021

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான போக்குவரத்தை கடற்பாலமொன்று அமைத்து சீர்செய்து தருவதாக கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொடுத்திருந்த வாக்குறுதி தற்போது நடைமுறைக்கு வரவுள்ளதால் தீவக மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு பகுதிகளுக்கும் இடையே ஒரு சிறிய கடற்பரப்பு காணப்படுவதால் இரு பிரதேகளுக்கும் இடையே ஒரு கடற்பாலத்தை அமைக்கவேண்டும் என குறித்த பிரதேச மக்கள் நிண்டகாலமாக கோரிக்கை வீடுத்துவந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தை அவதானத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களிடம் வாக்குறுதியாகவும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  முன்மொழிந்திருந்தார்

இதையடுத்து குறித்த மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இரு பிரதேசங்களையும் இணைக்கும் வகையில் கடற்பாலம் அமைப்பதற்டகான நடவடிக்கை ஆரைம்பிக்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பாலத்திற்கான மதீப்பீட்டுப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் வேலைகள் ஆரம்பபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காரை நகர்மூலம் தீவுப் பகுதிகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சீர்செய்து தாருமாறு யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைலேறவுள்ளதையிட்டு குறித்த பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றநமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!