ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 23rd, 2020

ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது. ஆரோக்கியமான சிந்தனைகளே சிறப்பான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் என்கின்ற உண்மையினை உணர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அல்வாய், மனோகரா சனசமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பதாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கந்துரையாடினார்.

குறிப்பாக தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதேச மக்களினால் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது இதனிடையே வடமாராட்சி கெருடாவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் மக்கள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில...
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சர்...