அழிவின் சின்னமாகவே இருக்கட்டும் என்ற யாழ். நூலகத்தை அறிவின் சின்னமாக கட்டியெழுப்பியவர்கள் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நான் பல்வேறு  தென்னிலங்கை அரசியல் தலைவர்களோடும் பழகியிருக்கிறேன். அவர்களது மன மாற்றங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன்.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதே அன்றி, தமிழ் மக்களின் மனங்கள் முழுமையாக வென்றெடுக்கப்படவில்லை என்று  ஜனாபதி மைத்திரி பாலசிறீசேனா அவர்கள் தெரிவித்திருப்பது  மன மாற்றங்களின் அடையாளமே.

அதுபோல்,.. இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ் நூலக எரிப்பு
குறித்து தனது மனவருத்தத்தை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

ஆகவே இன்று யாழ் நூலகம் புதுப்பொலிவோடு எழுந்து  நிமிர்ந்து நிற்பதையிட்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்  மகிழ்ந்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

ஆனாலும் தெற்காசியாவிலேயே சிறந்ததொரு யாழ் நூலகத்தை நாம் அன்று தமிழ் பேசும் மக்களின் அறிவின் சின்னமாக  புனரமைத்த போது,…

அது அழிவின் சின்னமாகவே இருக்கட்டும் என்று அதற்கு  தடையாக இருந்த பொறுப்பற்ற தமிழ் தலைமைகள் எவையும்  தமது தவறை எண்ணி மனவருத்தத்தை இதுவரை தெரிவித்ததில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-2 copy

Related posts:

விடுவிக்கப்படும் மயிலிட்டி த்துறை முகம் மக்கள் பயன் பட்டிற்கு ஏற்றவாறு புனரமை க்கப்படவேண்டும் அமைச்ச...
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் - கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அம...