யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 27/2 நிலையியல் கட்டளையின் கீழான கேள்வி நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம்? என கோரியதுடன் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்தி, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, மேற்படி வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் அனைத்துத் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்றும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் தனது குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன எனவும் தெரிவித்தார்.

Related posts:


மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈட...
பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொ...