அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் கிளிநொச்சி பல்கலைக் கழகமாக பரிணமிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, August 18th, 2022
,……….
கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் கிளிநொச்சி பல்கலைக் கழகமாக பரிணமிக்க வேண்டும்
என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பதாக யாழ். பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி, அறிவியல் நகர் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டிடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
கிளிநொச்சி மாவட்ட கல்வி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்வி வலயப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினர். –
Related posts:
|
|
|


