அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
அரியாலை, உதயபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு கட்டுப்பாட்டுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிரதேச மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆம் திகதி, குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளையும் மணல் அகழ்வு இடம்பெறுகின்ற பிரதேசங்களுக்கு அழைத்து, மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, 95 வீதமான சட்ட விரோத மணல் அகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பொர்னண்டோவுடன் நேற்று (17.06.2021) தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன் சட்ட விரோத செயற்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்துமாறும் தெரிவித்தார்.
Related posts:
|
|