அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 26th, 2022

அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலமே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்று ஈ.பி.டி.பி.  வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஏனைய தமிழ் தரப்புக்கள் அந்த நிலைப்பாட்டினை சுயலாப அரசியலுக்காகவேனும் பின்பற்றுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி. வலியுறுத்துகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையே சாத்தியானது என்பதை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் வெளிப்படையாக அறிவித்து  வருகின்றமையையும் சுட்டிக்காட்டினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் யாழ் தலைமை செயலகத்தில் நடைபெற்ற  இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் நிலைப்பாடுகளும் பொறிமுறைகளும் சர்வதேச நாடுகளினாலும் ஏனைய அரசியல் தரப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தெளிபடுத்த வேண்டியது கட்சிச் செற்பாட்டாளர்களின் வேலைத் திட்டமாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.-

000

Related posts:

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...
பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் - அமைச்சர் தேவா நம்பிக்கை!
செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அதிக அக்கறையும் செலுத்த வேண்டும் – ...

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் - அமைச்சர்...
குருநகருல் உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!