தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதுவித தயக்கமும் இன்றி தமது கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தொழில் நடவடிக்கைகளின் போது அறுவடை செய்யப்படும் கடலுணவுகளை சந்தைப்படுத்தவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் மேலும் கருத்த தெரிவிக்கையில் –

கொரோனா அச்சம் காரணமாக பிடிக்கப்படும் கடலுணவுகளுக்கு போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ் மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளன. அத்துடன் குடாக்கடலில் கடற்றொழிலுக்குச் செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படது.

நாட்டை அச்சுறுத்தும் கொரோனாத் தொற்றுக் காரணமாகத் தென் பகுதிக்குக் கடலுணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வடக்கில் பிடிபடும் கடலுணவுகள் போதிய சந்தை வாய்ப்பின்றி காணப்படுகின்றன. அத்துடன் உள்ளூர் சந்தைகளில் நண்டு, இறால், கணவாய் போன்றவை கிலோ 400 ரூபாக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் தாம் பெரிதும் பாதிழக்கப்டுவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது அவர்களது பிரச்சினைகள் ஆராயப்பட்டு கடலுணவை கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையால் கடற்றொழிலாளர்கள் எதுவித தயக்கமும் இன்றி தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: