அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019

அரச நிறுவனங்களின் செயற்பாட்டு முன்னேற்றமின்மையின் காரணங்கள் மற்றும் தடைகள், வினைத்திறன், குறை, நிறைகள் போன்ற விடயங்கள் அநேகமாகப் பேசப்படுகின்ற போதிலும், அந்தந்த அரச நிறுவனங்களின் ஊடான பொதுவான மக்கள் பயன்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிலை வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த அரச நிறுவனங்களின் முறைகேடுகள், ஊழல், மோசடிகள், முன்னேற்றத் தடைகளுக்கான காரணிகள் என்பன தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் உண்மை நிலை என்பது அதன் அறிக்கைகளின் மூலமாக தெளிவாகவே முன்வைக்கப்படுகின்ற நிலையில், இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற ஒரு சிலர் தங்களது சுய அரசியல் இலாபம் கருதி, பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் முன்பாகப் பரப்பி வருகின்ற மிக துச்சமான காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விடயத்தை இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

நான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்த காலகட்டத்தில், அந்த அமைச்சின் கீழிருந்த பனை அபிவிருத்திச் சபை தொடர்பிலான மேற்படி கோப் குழுவினது அறிக்கையில், பனை அபிவிருத்திச் சபையின் கீழிருந்த திக்கம் வடிசாலையில் ஊழல் மோசடிகள் நடைபெற்றிருந்ததாகவும், அது தொடர்பில் என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறித் திரிகிறார்

இப்படியே பொய்யாக எதையாவது கூறித் திரிந்தே எல்லோரையும் குழப்புகின்ற குணம் கொண்ட இந்த குழப்பவாத போதகர் கூறியதைப் போன்று அவ்வாறான எத்தகைய முறைகேடுகளை, ஊழல், மோசடிகளை நாம் இழைக்கவும் இல்லை. நான் மேற்படி அமைச்சுப் பொறுப்பினை ஏற்றிருந்த காலகட்த்துக்குள் அத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் இடம்பெற்றதாக இந்த கோப் குழுவின் அறிக்கையிலும் இல்லை என்பதையும் நான் மீண்டும் இந்தச் சபையிலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனவே, எம்மீது பொய்யான விடயங்களையே சோடித்து இந்த கையாகாலாத தமிழ் அரசியல்வாதிகள் கருத்துக்களாகத் திணிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் பண்டமல்ல – டக்ளஸ் எம்ப...
வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்கு நிதியுவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...