பொதுச் சொத்துக்களை பாதுகாத்து வீண் விரயங்களை தவிர்க்கும் முயற்சிகளை முன்னெடுங்கள் – நெடுந்தூர சேவை பேருந்து நிலையத்தை திறந்துவைத்தபின் யாழ் மாநகரசபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!

Wednesday, January 27th, 2021

மக்களின் பயன்பாட்டுக்கான பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் வீண் விரயங்களையும் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாநகரசபையின் நிர்வாகத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்றையதினம் நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் 120 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர  பேருந்து நிலையம் இன்றையதினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர், மாநகர முதல்வர் ஆகியோரால் மக்கள்  பயன்பாட்டுக்காக வைபவரீதியாகதிறந்துவைக்கப்பட்டது.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தை மக்கள்  பயன்பாட்டுக்காக வைபவரீதியாகதிறந்து வைத்தபின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

யாழ் மாநகர சபையில் திருமதி யோகேஷ்வரி பற்குணராஜா முதல்வராக இருந்த காலப்பகுதியில்  தான் குறித்த நெடுந்தூர  பேருந்து நிலையத்திற்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கட்டடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையமாக இன்றைய தினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி யாழ் மாநகரின் புதிய முதல்வரான மணிவண்ணன் அப்பதவிக்கு பொருத்தமானவராக அதற்குரிய தன்மையுடன் இருக்கின்றமையால் பெரும்பான்மையான உறுப்பினர்களது ஆதரவுடன் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் யாழ் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சிறப்பானதாக பராமரித்து வழிநடத்துவார்கள் என நம்புகின்றேன்.

அந்தவகையில் தனியார் மற்றும் அரச நெடுந்தூர பேருந்து சேவை கட்டத்தில் தமிழ் மொழிக்குனு மன்னுரிமை வழங்கப்படவில்லை என பார்க்க முடிகின்றது. இது தவறானதொன்றுதான். அதுமட்டுமல்லாது இவ்விடயத்தை ஒரு குழப்பத்தை உருவாக்கம் விடயமாக பார்க்காது அதை திருத்த முயற்சிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் ஒரு பகுதியில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக இருக்கின்றனரோ அவர்களது மொழிக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என உள்ளதால் இக்கட்டடம் யாழ் மாநகர சபையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதால் குறித்த தவறை யாழ் மாநகர சபை மாற்றி அமைக்க முடியும் என்றும் அதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கலாசார மண்ணப்தின் ஒரு அங்கமாக புல்லுக் களத்தையும் பார்த்து அதன் அபிவிருத்தியையும் யாழ் மாநகரசபை மன்னெடக்க வெண்டும் இதுவும் முன்னாள் முதல்வர் பற்கணராஜா காலத்தில் அடித்தளமிடப்பட்டிருந்தமையால் அவரது ஆலோசனையையும் பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ் முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாடகளுடன் ஆரம்பமான கறித்த நிகழ்வைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உள்ளிட்ட அதிதிகள் ஊர்வலமாக விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கயன் இராமநாதன், யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,  யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: