அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட்டுவாகல் கிராமியக் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வட்டுவாகல் கிராமியக் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, வட்டுவாகல் நந்திக்கடல் நீரேரியில் சட்டவிரோதகமாக மீனபிடித் தொழிலிலில் ஈடுபட்டுகின்றவர்களை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், குறித்த கடல் நீரேரியில் பாரம்பரியமாக தொழில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சட்ட விரோத மீன்பிடியை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததுடன், தமது பயன்பாட்டிற்கு இயந்திரப் படகு ஒன்றினை கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே வட்டுவாகல் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நந்திக்கடல் நீரேரிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கட்ட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன் அடுத்த கட்டப் பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அதன் அடுத்த கட்டப் பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்
இந்நிலையில் வட்டுவாகல் கன்னிமாரியாள் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த ஆலயத்தின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பாக ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|