வாழைச்சேனை பல நாள் படகு மீன்பிடியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!.

Wednesday, February 7th, 2024

பேலியகொட மத்திய மீன் சந்தையில் ஐஸ் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டும் அது நடைமுறையாவதில் காணப்படும் தாமதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

தாமதத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு மீன் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இலகுவாகவும் , விலை குறைவாகவும் ஐஸ் கட்டிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் , அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கணக்காளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே இலங்கை மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர்;.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக விடயங்கள், மீன் வியாபார செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த , அமைச்சின் செயலாளர்கள், மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட உதவி பொது முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே

வாழைச்சேனையில் பல நாள் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.

இதன்போது தமது படகுகள் ஒரு வாரமே கடலில் தொழில் செய்வதால் தமது  படகுகளுக்கு  கண்காணிப்பு கருவிகளை பூட்டுவதை தவிர்த்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தமக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மெளலானா, அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...