அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு திறக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, June 3rd, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதியை ஒதுக்கி அன்றைய அமைச்சரவை அனுமதி அளித்து கட்டப்பட்டது.

ஆனாலும் அதன் அமைவிடம் தொடர்பில் அன்றைய வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இழுபறி நிலை காரணமாக குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டபோதும் மக்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு விடாது பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த மாவட்ட வர்த்தகர்களும் பொதுநலவிரும்பிகளும் கொண்டுசென்றிருந்த நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
வடக்கின் கடல் வளங்களின் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் -சபையில் டக்ளஸ் தேவானந்தா ...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...