தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் – வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!

Friday, September 30th, 2016

உணர்ச்சிப் பேச்சுக்களை நம்பி வாக்களித்து யாரை வெற்றிபெறச் செய்தோமோ அவர்கள் இன்று எம்மை நடுத்தெருவில் கைவிட்ட நிலையில் நாம் நாதியற்று வாழ்ந்துவரும் அவலம் தொடர்வதாக இயற்றாலை வரணி கிராமங்களின் மக்கள் சுட்டிக்காட்டினர்.

தாவளை இயற்றாலை வரணி வினாயகர் முன்பள்ளியில் இன்றையதினம் அப்பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடிய போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

10 (3)

கடந்தகாலங்களில் நாம் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்று உணர்ச்சிப் பேச்சுக்களைப் பேசியவர்களுக்கு தேர்தல் காலங்களில் வாக்களித்திருந்தோம். அவர்களால்தான் எமக்கு உரிமை கிடைக்கும் என்றும் நாம் நம்பியிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் வாக்களித்த மக்களாகிய எம்மை புறந்தள்ளிவிட்டு தமது சுகபோக வாழ்க்கையை முன்னிறுத்தி அதனை அனுபவித்து வாழ்ந்து வருகின்றமையானது எமக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் தருகின்றது.

10 (2)

எமது மீள்குடியேற்றமானாலும் சரி காணாமற்போனவர்கள் தொடர்பிலான அவர்களின் அக்கறை குறித்தும் சிறைகளில் வாடும் எமது விடுதலை தொடர்பிலும் நாளாந்த எமது வாழ்வியலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் அவர்கள் எமக்கான விடயங்களில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. இவ்வாறு அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களுக்கு வாக்களித்ததன் பெறுபேறுகளையும் நாம் இன்று உணர்ந்து வருகின்றோம்.

அத்துடன் அவர்களுக்கு வாக்களித்தது பெரும் தவறு என்பதையும் இப்போதுதான் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ஆகையால் எதிர்காலங்களில் மக்களுக்காக உழைப்பவர்களாக டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியே முழுமையாகவும் அர்ப்பணிப்போடும் உழைத்து வருவதை நாம் தற்போது கண்கூடாக கண்டு வருகின்றோம்.

10 (5)

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களைத் தவிர ஆட்சி மாற்றத்தின் பின்னரான இற்றைவரை நாம் வாக்களித்த பிரதிநிதிகளால் ஒன்றைக்கூட முன்னெடுக்க முடியாதது இதற்குச் சான்றாக இருக்கின்றது.

ஆகையினால் எதிர்காலங்களில் மக்களாகிய நாம் சரியான அரசியல் தலைமையைத் தெரிவு செய்ய வேண்டியது அவசியமானது என்பதுடன் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் ஒன்றரைக் கிலோமீற்றர் நீளமான கல்வளை பிள்ளையார் கோவில் வீதி மற்றும் மயான வீதி என்பனவற்றின் புனரமைப்புத் தொடர்பாக செயலாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்த அதேவேளை தமது ஏனைய பிரச்சினைகள் இடர்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தனர்.

10 (4)

முன்பதாக கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்தில் கட்சியின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து சாவகச்சேரியில் வாரிவநாதர் சிவன் கோவிலுக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா அங்கு கூடிநின்ற மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது கோவிலைச் சூழவும் உள்ள வீதியை தாரிட்டு செப்பனிடப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன் சிவன் கோவில் தெற்குப்புற வீதி தொடர்பிலும் டக்ளஸ் தேவானந்தா அவதானம் செலுத்தியிருந்தார்.இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வீ.கே.ஜெகன்) கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாகச் செயலாளர் நடுநாயகமூர்த்தி முன்னாள் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

10 (1)

Related posts:


கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - சரவணை மக்கள் புக...
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு இறுதிக் கட்டத்தில் அமைச்சர் டக்ளஸின் முயற்சி!