தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, October 17th, 2019

நடபொறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரான கோட்டபய ரஜபக்‌ஷ்வின் வெற்றியில் எமது மக்களின் பங்கும் இருக்கவேணடும்.  தென்னிலங்கையில் கோத்தபாய வெல்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் காணப்படுகின்றது.

அந்த வெற்றியில் பங்களித்து அதனை மக்களுடைய வெற்றியாக மாற்றி கொள்ளுங்கள். அதனூடாகத்தான் எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் பெற்றுகொள்ளலாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஜந்து கட்சிகளின் ஒற்றுமை என்பது மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டாகவே இருக்கிறது. தேர்தல் காலங்களில் ஐக்கியத்தை பற்றி பேசி, இனவாத சூழலை உருவாக்கி குளிர் காய்வதே அவர்களுடைய நோக்கம். எனவே மீண்டும் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த ஐந்து கட்சிகளின் ஒன்றிணைவை பார்க்கமுடியும். இருப்பதை இல்லாமல் செய்யும் வேலையையே இந்த கட்சிகள் செய்ய போகின்றார்கள்.

ஆனால் இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டும் அதுவே எமது கொள்கை. கூட்டமைப்பினர் இன்றைய ஆட்சியை உருவாக்குவதற்காக பலவற்றை மக்களிடத்தில் சொன்னார்கள். ஆனால் அவை எதனையும் மக்களுக்கு செய்யவில்லை.  அந்தவகையில் தான் நாம் கூறுகின்றோம் எம்மை நம்புங்கள், எம்மோடு அணி திரளுங்கள் என்று.  

எமது கட்சியில் 98 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவரும் விலகி போகவில்லை. அவ்வாறு போனதாக தெரிவிக்கபடுவது வழமையான, பொய்யான பிரசாரமே என்று தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரான கோட்டபய ரஜபக்‌ஷவின் வெற்றியில் எமது மக்களின் பங்கும் இருக்கவேணடும் அதனூடாக நாம் எமது மக்களின் அபிலாஷைகளை  வெற்றிகொண்டு கொடுக்க முடியும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: