அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ரான்லி வீதியில் திரண்ட மக்கள்!
Friday, January 31st, 2020
கடந்த 5 வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட யாழ் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது யாழ்ப்பானத்திலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் மாவட்டத்தி மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்தின் தீவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பொது அமைப்புகள் அரச உத்தியோகத்தர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை பலதரப்பட்ட தேவைப்பாடுகளுடன் வருகைதந்து அமைச்சரை சந்தித்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்ட அமைச்சர் அவர்களத நியாயமான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காலக்கிரமத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|





