அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
Thursday, May 30th, 2024
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான அனுமதி வழங்கும் கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவரும் வடக்கின் ஆளுனருமான திருமதி சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில்( 30.05.2024) நடைபெற்றது.
இதன்போது வீட்டுத்திட்டம், காணி விடுவிப்பு, குடி நீர் வழங்கல், வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு, விவசாய நலன்கள், சுண்ணக்கல் அகழ்வு மற்றும் வெளி இடங்களுக்கு சட்டவிரோதமச்க கொண்டு செல்லல், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுபினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் ஸ்ரீதரன், அங்கயன் இராமனாதன், வடக்கின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அரசாங்க அதிபர் பிரதீபன் (பதில்), மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் அரச நிறுவனங்களிம் அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


