அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் – எரிபொருள் விற்பனை தொடர்பில் மேற்பார்வை செய்யுமாறு நெடுந்தீவு பிரதேச செயலருக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 14th, 2023

எரிபொருட்களின் விலை நாடளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எரிபொருள் விற்பனை தொடர்பாக மேற்பார்வை செய்யுமாறு பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட சுமார் 45 ரூபாய் வரையில் விலை அதிகரித்து நெடுந்தீவில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

000

Related posts: