அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019

புங்குடுதீவு மடத்துவெளி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

இப்பகுதியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படாதுள்ளது. குறிப்பாக வீட்டுத்திட்டம் மலசலகூடம் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர தொழில்வாய்ப்பின்மை வீதிகள் புனரமைக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நாம் நாளாந்தம் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றோம்

அந்தவகையில் எமது இயல்பு வாழ்வை மீட்டெடுப்பதற்கு இவ்வாறான எமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை முன்வைத்தனர்.

இதனிடையே புங்குடுதீவு தொழிலாளர்புரம் மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது காந்தி விளையாட்டு கழகத்தினர் தமது விளையாட்டு மைதானத்திற்கான காணியின் உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுதருமாறும் அப்பகுதியில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறும் கோரியதுடன் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள வழிவகைகளையும் மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்விரு பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நயாகம் டக்ளஸ் தேவானந்தா காலக்கிரமத்தில் இவற்றுக்கான தீர்வுகளை உரிய துறைசார் தரப்பினரூடாக பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Related posts:


நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் - இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு...