யாழ் – பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!

Thursday, December 26th, 2019

யாழ்- பல்கலைகழக விஞ்ஞான பீடம் ஏற்பாடு செய்திருந்த சூரிய கிரகணத்தை பார்வையிடும் நிகழ்வில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இன்று (26.)காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் குறித்த நிகழ்வுநடைபெற்றது.

இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.

இதன்போது தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமந்திபால அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...