ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 2 – ஈழ நாடன்

உலகிலுள்ள துப்பாக்கிகள் எதுவாகட்டும்
அவற்றைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல்
அனைத்தையும் பெற்றவர்!
இலங்கையில் பாவனைக்கு வருமுன்பே
ஏ. கே. 47, ரி. 56 இயந்திரத் துப்பாக்கிகள் தொடர்பில்
முழுமையான பயிற்சிகளை முறையாகப் பெற்றவர்!
அக்காலகட்டத்தில்
துப்பாக்கிகள் எதுவாயினும்
பாகங்களாக அவற்றைப்
பிரித்துப் போட்டு – மீண்டும்
முழுமையாகப் பொருத்துவதற்கு
இவருக்கு எடுக்கும் நேரம்
ஒரு நிமிடத்திற்கும் குறைவானது!
கராத்தே தற்காப்புக் கலையில்
கறுப்புப் பட்டி விருதும்
கராத்தே ஆலோசகர்களுக்கான முதலாம் தர விருதும்
வென்றவர்!
வெளி நாடுகளிலும்
முறையான யுத்தப் பயிற்சி பெற்றவர்!
ஆறடி உயரம்
ஆஜானுபாகுவான தோற்றம்
பார்ப்போரைக் கவரும் உருவம்
பசித்திருந்தும் உழைக்கும் பக்குவம்
ஆறு நாட்கள் ஆனாலும்
உணவு, தண்ணீரின்றி
சிரமங்கள் ஏதுமின்றி
வாழ முடிந்த பயிற்சி
அத்தனையும் கொண்டவர்
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்!
இந்த அத்தனை சிறப்புகளும்
ஒருசேர வாய்த்த தோழர் டக்ளஸ் தேசானந்தா அவர்கள்
இலங்கை நாடாளுமன்றத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது
மேலுமொரு சிறப்பம்சமாகும்!
1994ம் வருடம் ஆரம்பித்த இவரது
நாடாளுமன்ற பயணம்
இன்றும் இடைவிடாது தொடர்கிறது!
ஆறு முறை இவர் இதுவரை
தொடர்ச்சியாக
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் மக்களால்
தங்களது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்!
இந்த வகையில்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில்
சிரேஸ்ட நிலையில் முதலிடம் வகிக்கிறார்!
முழுமையான யுத்தப் பயிற்சி
நடைமுறை ரீதியில் பெற்று –
மேலும் பல தற்காப்புப் பயிற்சிகள்
தன்னகத்தே கொண்டு –
மக்களின் சேவையே உயிரென்பதால்
13 தடவைகள்
மரணத்தின் வாயிலுக்கே சென்று வந்து –
இன்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் –
அவர் – டக்ளஸ் தேவானந்தா அவர்கள்!
ஆரம்ப காலத்தில்
ஆயுதப் போராட்டத்தின்மீது நம்பிக்கை வைத்து –
ஈழத் தமிழர் போராட்ட இயக்கங்களில் பங்கெடுத்து,
வழிநடத்தல்களையும் மேற்கொண்டிருந்த
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
பின்னரான காலங்களில்
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு,
தேசிய அரசியலில் பிரவேசித்தவர்!
(தொடரும்)
Related posts:
|
|