தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்றவர்களே காரணம் – இந்து மதக் குருக்களான பிரம்மஸ்ரீ பால.பத்மநாதக் குருக்கள்!

Saturday, June 13th, 2020

இதுவரை தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்ற நாங்களே காரணம் என்று இந்து மதக் குருக்களான பிரம்மஸ்ரீ பால.பத்மநாதக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி வலியுறுத்துகின்ற அரசியல் வழிமுறையை தவிர வேறு ஏதும் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பிய இந்து மதக் குருக்கள் எமது பிரச்சினைகளுக்கான தீர்வை தென்னிலங்கையுடன் கலந்தாலோசித்து பெற்றுக் கொள்ள முடியுமே தவிர சர்வதேச  சமூகத்தினால் எதனையும்  பெற்றுத் தரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் வடமாராட்சியின் வட்டார பிரதிநிகளுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு பருத்திதுறை தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் செயலாளர் நாயகத்தினால் தெளிபடுத்தும் நோக்கில் கொறோனா தொடர்பான சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்து மதக் குருக்களான பிரம்மஸ்ரீ பால.பத்மநாதக் குருக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியானது - அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் த...
ஜெனிவா மாநாட்டினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு ஏற்படப்போவது கிடையாது - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவி...