பாடசாலை வளாகங்களில் டெங்கு பரிசோதனை – சுகாதார அமைச்சு!

Saturday, December 24th, 2016

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கு முன்னர் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை வளாகங்களை டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சுடன் இணைந்து சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவு கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய பிரதேசங்களிலும் கல்முனையிலும் உள்ள பாடசாலைகளில் கூடுதலாக டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.

கூடுதலான டெங்கு பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இப்பிராந்தியங்களில் காணப்பட்டமையே இப்பகுதிகளில் அதிககவனம் செலுத்த காரணமாகும். முப்படையினர்,சுகாதார திணைக்கள ஊழியர்கள் அடங்கிய 640 குழுக்கள் இந்த டெங்கு பரிசோதனைச் சேவையில் ஈடுபடுத்தப்படுவர். காலிப் பிராந்தியத்தில் நுளம்புகள் அதிகம் என்பதால் தினசரி காலி நகரசபை பிரதேசங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

Sri-Lanka-health-ministry

Related posts: