ஆபத்தான கட்டத்தில் தொடர்மாடி: உடனடியாக மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை!

Thursday, April 26th, 2018

கொழும்பு – 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அதிகாரிகளுக்கு ஆலோசனைவழங்கியுள்ளார்.

குறித்த கட்டடத்தின் ஆபத்தான நிலமை மற்றும் உடனடி நடவடிக்கை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த உத்தரவினைபிறப்பித்துள்ளார்.

கட்டட ஆய்வு நிலையத்தினால் “2012ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலமையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்தநிலைமை சிக்கலாகியுள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்களுக்கு இந்த ஆபத்து தொடர்பில் அறிவித்து விரைவில் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியின்ஆலோசனைக்கமைய உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன்.

அவர்களுக்கு தற்காலிக இடங்கள் வழங்குவதற்கு அவசியமான கொள்கைள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த குடியிருப்பு மக்களை ஆபத்தில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

தனி நபரின் தவறே நாடு முழுவதும் மின் தடை ஏற்படக் காரணம் - உறுத்திப்படுத்தியது விசாரணை குழு!
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப...

இலங்கை - இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றே...
வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது - பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாக...
நீண்டகாலமாக சிறையிலிருக்கும் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் - ஜனாதிபதியிடம் ஞானசார தேரர்...