பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு – 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
Wednesday, December 20th, 2023
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 109 பேரிடம் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 184 பேரை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கோண்டாவில் தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
கொரோனா தொற்று: இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
பட்டதாரிகளுக்கு நியமனம்: பிரதமர் செயலாளரின் தலைமையில் குழு நியமனம்!
|
|
|


