அரசாங்க சுற்று நிருபங்கள் மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு காரணமாகக்கூடாது – ஜனாதிபதி

Tuesday, October 10th, 2017

அரசாங்க சுற்று நிருபமும்  எதவானாலும் அது மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு அல்லது வினைத்திறன் மிக்கதாக முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக அமையக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தொழில் சார்ந்த சேவையின் வினைத்திறன் மற்றும் முறைமைப்படுத்தலுக்கு ஏதேனும் சுற்று நிருபம் தடையாக இருக்குமானால் அதனை உடனடியாக கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற உலக தபால் தின 143 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தபால் சேவையில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் இதன்போது குறிப்பிட்டார். எந்தவொரு தொழில்சார் பிரச்சினைக்கும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காண முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தபால் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி 1970 முதல் உலக நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09 ஆம் திகதி உலக தபால் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 143 ஆவது உலக தபால் தினைத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய முத்திரை மற்றும் முதலாம் நாள் அஞ்சல் உறை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் ,ஈ கொமஸ் இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

143 ஆவது உலக தபால் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலரும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. தபால் சேவை ஊழியர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.தபால் திணைக்களத்திலுள்ள 8,500 தபாற் காரர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல் மற்றும் தபால் போக்குவரத்து சேவையை வளப்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபா செலவில் வான் மற்றும் கெப் வாகனங்கள் ஜனாதிபதியினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது

Related posts: