ஆசிரியர் இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்கின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023

மாகாண மட்டத்தில் புதிய பணி ஒழுங்குமுறையும் சுற்றறிக்கையும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்ற சபைகள் ஒன்றிணைந்து ஆசிரியர் இடமாற்றப் பட்டியலை உருவாக்கினால் அது தவறான நடவடிக்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (22) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அங்கு கல்வி தொடர்பாக கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர் இடமாற்ற சபைகளில் ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் ஆசிரியர் இடமாற்ற சபைகளில் ஈடுபட்டு தங்கள் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு அத்தகைய நீதி வழங்கப்படாது. எனவே, ஆசிரியர் இடமாறுதல் சபையில் இணைவதற்கு முன்மொழிந்தோம். இது அவர்களின் உறுப்பினர்களுக்கு நியாயமானதாக இருந்தால், அவர்கள் சேர முடியும்.

ஆனால், ஆசிரியர் இடமாறுதல் சபைகள் ஒன்று கூடி ஆசிரியர் இடமாற்றம் செய்ய பட்டியலை உருவாக்கினால் அது தவறு. இது பல வலயங்களில் நடக்கும் ஒன்று.

எனவே, இது தொடர்பாக  பணி  ஒழுங்குமுறை  வகுத்து,  சுற்றறிக்கை தயாரித்து, மாகாணசபைக்கு அனுப்பினால் நல்லது என அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி தான் இடமாற்ற சபை கூடுகிறது. அவற்றில் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள் என கல்வி அமைச்சர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: