நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Sunday, May 30th, 2021

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அந்தத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts:

ஆசையும், பேராசையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் - இந்திய துணைத்தூதுவர் நடாராஜன்!
நிர்மாணத் துறையில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு - நெடுஞ்ச...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமை...
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தினார்...
ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது - வனிந்து ஹசரங்க 222 புள்ளிக...