500 தொன் பொதியுடன் சவுதி மன்னர் இந்தோனேஷியாவுக்கு பயணம்!

Saturday, March 4th, 2017

இந்தோனேஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிக்கும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் தம்முடன் 1000க்கும் அதிகமான பிரதிநிகளோடு 500 தொன்கள் கொண்ட பயணப்பொதியையும் எடுத்து வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜகார்த்தா வந்த மன்னர் அடுத்து பாலிக்கு செல்லவுள்ளார். கடந்த அரை நூற்றாண்டில் சவூதி மன்னர் ஒருவர் இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும்.

மன்னர் கொண்டுவந்திருக்கும் பயணப் பொதியில் அவர் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு உதவும் தங்கம் பூசப்பட்ட இரு நகரும் படிக்கட்டுகள், இரு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600எஸ் வண்டிகள் மற்றும் பெரும் அளவான ஹலால் உணவுகள் அடங்கும்.

இந்த பயணப்பொதியின் எடை மூன்று நீலத் திமிங்கிலங்களின் அளவாகும். இந்த சரக்குகளை கையாள 570க்கும் அதிகமான பணியாளர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மன்னரின் ஒரு மாத ஆசிய சுற்றுப்பயணத்தில் முன்னதாக அவர் மலேஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது கோலாலம்பூரில் இருக்கும் மூன்று ஆடம்பர ஹோட்டல்கள் முழுமையாத பதிவு செய்யப்பட்டுள்ளது.

coltkn-03-03-fr-03171311294_5282254_02032017_MSS_GRY

Related posts: