இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுங்கள் -சேர்பியாவை வலியுறுத்து அமெரிக்கா!

Saturday, September 30th, 2023

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவுடனான (Kosovo) எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுமாறு சேர்பியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கோசோவோவில் கடந்த சில மாதங்களாக இரண்டு இனங்களுக்கு இடையே பதற்ற நிலைமை அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் அங்குள்ள நேட்டோ அமைதி காக்கும் படையினருடன் இணைவதற்காக தங்களது துருப்புக்களை அனுப்பவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோசோவோவின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற மோதலில் நால்வர் பலியாகினர்.

இதனையடுத்து அங்குள்ள எல்லைப் பகுதியில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தயாராக இருப்பதாக சேர்பிய இராணுவ புலனாய்வு பிரிவினர் அறிவித்தனர்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கிர்பி எல்லை பகுதியில் அதிநவீன ஆயுதங்களுடன் பெரிய இராணுவ வரிசை காணப்படுவது அபிவிருத்தி செயற்பாடுகளை சீர்குலைக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எல்லை பகுதியிலுள்ள படையினரை மீளப் பெறுமாறு சேர்பியாவை வலியுறுத்துவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: