சீன – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு!

Thursday, June 20th, 2019

சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று வட கொரியாவில் சந்திக்கவுள்ளார்.

2005ஆம் ஆண்டிற்குப் பின் சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை.

இவர்களின் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீன அந்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: