ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று!

Sunday, September 26th, 2021

அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான நேற்று, ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் ஜனாதிபதி அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் வழமைக்கு மாறாக கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் சமூக ஜனநாயக் கட்சிக்கு 26 வீத வாக்குகள் கிடைக்கும் என கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 16 ஆண்டுகளாக ஜேர்மனியின் ஜனாதிபதியாக உள்ள அங்கெலா மேர்க்கெலின் கட்சிக்கு 25 வீத வாக்குகளும் கிரீன் கட்சிக்கு 16 வீத வாக்குகளும் கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

000

Related posts: