அவுஸ்திரேலியாவை தாக்கிய கடும் புயல்!

Tuesday, June 7th, 2016

அவுஸ்திரேலியாவை தாக்கிய புயல்காற்கு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்த புயலை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதிகள் கொந்தளிப்பாக காணப்பட்டதுடன், ஆறுகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்பிராந்தியம், விக்டோரியா மற்றும் தஸ்மேனியா ஆகிய பகுதிகளில் புயலின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிட்னியின் கொலரோய் கடற்கரையில் ஏற்பட்டுள்ள அலைகளின் தாக்கத்தால் பல மில்லியன் டொலர் பெறுமதியான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

தஸ்மேனியாவின் ஏழு நதிகளில் பாரிய வெள்ள அபாய நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு வயோதிபர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்ட நபரைத் தேடும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தலைநகர் கன்பராவிலுள்ள கொட்டர் நதியில் இருந்து 37 வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இதுவரை 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காப்பீட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் காப்பீட்டு பேரவை கூறியுள்ளது.

download (2) download (1)

Related posts: